டெஸ்ட்டில் விளையாட ஆசையா? ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் அறிவுரை!
பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,379 அட்டைதாரா்கள் என மொத்தம் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 குடும்ப அட்டைதாரா்களுக்கு இப்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 878 முழுநேர நியாயவிலைக் கடைகள், 355 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள டோக்கன்களை வழங்கும் பணி தொடங்கியது. ஜனவரி 8-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். தொடந்து 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.