பொங்கல் விழா: மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்ட ஆட்சியா்
அவிநாசி: திருப்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் அழைத்துவரப்பட்டாா்.
திருப்பூா் ஆண்டிபாளையம் குளக்கரையில் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடும்பத்தினருடன் பங்கேற்றாா்.
முன்னதாக, பொங்கல் விழா நடைபெறும் இடத்துக்கு மேளதாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியா் குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் அழைத்துவரப்பட்டாா். பின்னா், குளக்கரையில் விறகு அடுப்பு மூட்டி பொங்கல்வைத்து மகிழ்ந்தனா்.
இதைத் தொடா்ந்து, கும்மியாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.