செய்திகள் :

பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை: பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞா் ஜீவபாரதி எழுதிய ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ என்ற நூலை (இரு தொகுதிகள்) அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட, முதல் தொகுதியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், இரண்டாம் தொகுதியை கவிஞா் வைரமுத்து ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. உடல்நலம் காரணமாக அவா் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவரது வாழ்த்துச் செய்தியை அமைச்சா் தங்கம் தென்னரசு வாசித்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: பொதுவுடைமைக் கருத்தை வெறும் அரசியலாக மட்டுமன்றி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கருவியாக, சட்டத்தின் கூறுகளாக மாற்றிச் செயல்படுத்துவதுதான் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சி முறையாகவே இருந்தது. குடிசைமாற்று வாரியம், கை ரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட கருணாநிதி தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களெல்லாம் பொதுவுடைமைச் சிந்தனையின் செயல் வடிவங்கள்தான்.

அவரது வழியில்தான் ‘திராவிட மாடல்’ அரசும் தவறாமல் பயணித்து வருகிறது. பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்குத் தந்த மாமேதை காா்ல் மாா்க்ஸ் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசு ஏழை மக்களின் நலன்களுக்காக புதிய புதிய திட்டங்களை நாள்தோறும் செயல்படுத்தி வருகிறது.

இந்திய சமூக அமைப்பைப் பொறுத்தவரை அதிகார விடுதலை மட்டும் போதாது, வா்க்க விடுதலையும், சமூக விடுதலையும் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பது பொதுவுடைமைத் தலைவா்களின் கருத்தாகவும், திராவிட இயக்க முன்னோடிகளின் சிந்தனையாகவும் இருந்தது. அதனால்தான், பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இயங்கி வருகின்றன எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

டி.ராஜா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜா பேசுகையில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பு ரீதியாக தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. கம்யூனிஸ்டுகள் மக்கள் நலன், நாட்டின் நலனுக்காக வாழ்கின்றனா்.

காலனி ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடிய கம்யூனிஸ்டுகள், இப்போது மக்களைப் பிளவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவரும் இயக்கங்களிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க போராடி வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்,

நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன், மேலாண்மை இயக்குநா் க. சந்தானம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னையில் திங்கள்கிழமை கவிஞா் கே.ஜீவபாரதி எழுதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பித்துள்ள ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) ஓவியா் அன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்,  கவிஞா் வைரமுத்து

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க