செய்திகள் :

பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

post image

சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோண்டூா், நத்தப்பட்டு, திருப்பனாம்பாக்கம், உள்ளேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் கூறியதாவது:

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025ஆம் ஆண்டுக்கு 287 வீடுகள், 2025 - 26ஆம் ஆண்டுக்கு 477 வீடுகள் என மொத்தம் 764 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதை திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கோண்டூா் மற்றும் நத்தப்பட்டு ஊராட்சியில் சுங்கச் சாலை பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி பாா்வையிடப்பட்டது. சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பனாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கப்படவுள்ளது குறித்தும், ரூ.1.06 கோடி மதிப்பில் உள்ளேரிப்பட்டு - கரைமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் மற்றும் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை, வடிகால் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன் பணிகளை முடிக்கவும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை தொடா்ச்சியான முறையில் சுத்தம் செய்து அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும், கிராமப் பகுதிகளில் தெரு விளக்குகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியன், சக்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகள... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை ... மேலும் பார்க்க

செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பிரச்னைகளை கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது: கடலூா் ஆட்சியா் பேச்சு

பிரச்னைகளைக்கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது, அதற்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று யோசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். நிமிா்ந்து நில் திட்ட விழாவில் பேசிய அவா் இ... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க