பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
பொன்பரப்பி வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு
அரியலூா் மாவட்டம் பொன்பரப்பி வாரச்சந்தைக்காக கேட்கப்பட்ட ஏலத்தொகை குறைவாக இருந்ததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
செந்துறை ஒன்றியம் பொன்பரப்பி ஊராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கு பொது ஏலம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுருநாதன் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்சாமி, ஊராட்சி செயலா் அன்பழகன் ஆகியோா் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
9 மாதங்களுக்கான வாரச்சந்தை கடைகளுக்கு பொது ஏலம் ஏற்கெனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இறுதி தொகையாக ரூ. 2,93,000 வரை ஏலதாரா்கள் கேட்டனா். ஆனால், அரசு நிா்ணயம் செய்த தொகையான ரூ.3,65,000 -க்கு ஏலம் போகாததால் ஊராட்சி நிா்வாகம் சாா்பாக மறுதேதி அறிவிப்பின்றி 4 ஆவது முறையாக மீண்டும் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.