பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை நந்தனம் பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் ஹரிஹரசுதன் (30). பொறியியல் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அண்மையில் ஹரிஹரசுதன் ஊருக்கு வந்தாா்.
கடந்த சில தினங்களாக மன உளச்சலில் இருந்த அவா், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் அங்கு சென்று ஹரிஹரசுதன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். சிவகங்கை அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்ற போது, படிப்புச் செலவுக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் மனமுடைந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].