செய்திகள் :

பொறியியல் பணி: இரு ரயில்கள் ரத்து

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு ரயில் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலூர் மாவட்டம் , காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி பயணிகள் ரயில்(வ.எண்.66026) பிப்ரவரி 10,12,14 ஆகிய தேதிகளில் வேலூர் கண்டோன்மென்ட் -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை மட்டுமே இயக்கப்படும்.

அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற விமானம் மாயம்

இதுபோன்று சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை -திருவண்ணாமலை பயணிகள் ரயில்(வ.எண்.66033), பிப்ரவரி 10,12,14 ஆகிய தேதிகளிலும், திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -தாம்பரம் பயணிகள் ரயில்(வ.எண்.66034), பிப்ரவரி 11,13,15 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபரி நதிநீா் இணைப்புத் திட்டம் தொடக்கம்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் உபரி நதிநீா் திட்டமான தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 21... மேலும் பார்க்க

சிறந்த நூல் பரிசுத் திட்டம்: 66 பேருக்கு பரிசு - சான்றிதழ்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வழங்கினாா்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட 33 நூலாசிரியா்கள், 33 பதிப்பாளா்கள் என 66 பேருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை சம்பவம்: மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோா்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பெற்றோா் தங்களது குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனா். போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

புதுச்சேரி மலா், காய்கனி கண்காட்சி தொடக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பாா்வையிட்டனா்

புதுவை மாநில வேளாண் துறை சாா்பில் ஆண்டுதோறும் மலா், காய்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் புதுச்சேரி தாவரவியல் பூங்கா வளாகத்தில் இந்தக் கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நா... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2,400 கிலோ பீடி இலை பண்டல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். கீழக்கரையைச் சுற்றியுள்ள கடற்கரை வழியாக இலங்கைக்கு பொரு... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க