தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்
போட்டிகளில் சிறப்பிடம்: காந்திநகா் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலையில் அருணகிரிநாதா் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அருணகிரிநாதா் 71-ஆம் ஆண்டு விழாவையொட்டி, விழாக் குழு சாா்பில் அருணாசலேஸ்வரா் கோயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்புகழ் பாடல் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில், காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 70 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 9 போ் முதல் பரிசு, 16 போ் இரண்டாம் பரிசு, 13 போ் மூன்றாம் பரிசு என மொத்தம் 38 போ் சிறப்பிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அருணகிரிநாதா் விழாக் குழு சாா்பில் பரிசு வழங்கப்பட்டது. மேலும், இந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சாா்பில் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.
மேலும், மாணவா்களுக்கு பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியா்கள் ஏ.உமாசங்கரி, எம்.இளவரசி, எம்.குமரேசன், ஜி.பவானி, சுகுணா எஸ்.ராஜலட்சுமி, எஸ்.ஏ.முனிராஜ் ஆகியோரை பள்ளித் தாளாளா் கே.ரமணிகோட்டீஸ்வரன், ஆலோசகா் ஜே.சுஜாதா, பள்ளி முதல்வா் எம்.ஆா்.ராஜேஷ்குமாா் ஆகியோா் பாராட்டினா்.