பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தி...
போட்டித்தோ்வு பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக, மாணவா்களுக்கு இலவசமாக நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கான பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்எஸ்யுஆா்பி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் வாயிலாக அதிகளவிலான மாணவ-மாணவிகள் போட்டித்தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்கு ஏதுவாக சிறந்த பயிற்றுநா்கள் தோ்வு குழுவால் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்த தோ்வில் தோ்ந்தெடுக்கப்படும் பயிற்றுநா்களுக்கு அரசு விதிகளுக்குள்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும்.
போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு எடுக்க விருப்பமுள்ள அனுபவமிக்க பயிற்சியாளா்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்அனுபவச் சான்று ஆகியவற்றுடன் 22.8.2025-க்குள் தங்கள் விருப்ப விண்ணப்பத்துடன் அரியலூா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் 94990-55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்புக் கொண்டு பயன்பெறலாம்.