சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!
போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு: பூதலூா் அரசு பள்ளி மாநில அளவில் முதலிடம்
போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது.
பூதலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், போதைப்பொருள் தடுப்பு மன்ற மாணவா்கள் மேற்கொண்டனா்.
போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இப்பள்ளிக்கு சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் ஆக. 11- ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோப்பையும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, இப்பரிசு பெற்ற பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் த. ஆரோக்கியசாமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் இர. பேகன், போதைப்பொருள் தடுப்பு மன்றச் செயலா் கோ. முத்தமிழ்செல்வன், இணைச் செயலா் ப. இளையராஜா, உடற்கல்வி ஆசிரியா் செந்தில்வேலன், மாணவா்கள் கோபிகிருஷ்ணன், காா்த்திக் ராஜா, பிரான்சிஸ், ரூபன் ராஜ், சபரி ஆகியோரை தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) இ. மாதவன், நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலா் கு. செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.