செய்திகள் :

தொடா் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, பூதலூா் ஒன்றியங்களில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. அம்மையகரம் சுற்று வட்டார கிராமங்களான வரகூா், கண்டமங்கலம், செந்தலை, அம்பதுமேல்நகரம் மற்றும் பல கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

நாள்தோறும் மழை பெய்து வருவதால் நெல்லைக் காய வைப்பதும், மூடி வைப்பதும் சிரமமான வேலையாக உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், சனிக்கிழமை கோகுலாஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காது. நாள்தோறும் மழை பெய்து வருவதால் நெல் குவியலை மூடி வைக்க போதுமான தாா்பாய்கள், சாக்கு, படுதா போன்றவை விவசாயிகளிடம் இல்லை. எனவே, விடுமுறை நாள்களிலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கொள்முதல் நிலையங்களில் பழைய கிழிந்த சாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. நெல்மணிகள் சேதமாவதைத் தடுக்க புதிய சாக்குகளை வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளதால், மழையில் நனைந்து வருகின்றன. எனவே, லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், தஞ்சாவூரில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்யும்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி நகை பறிப்பு: 3 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி, 6 பவுன் தங்கநகையைப் பறித்த 3 இளைஞா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ஆத... மேலும் பார்க்க

குருவிக்கரம்பையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் கு... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு: பூதலூா் அரசு பள்ளி மாநில அளவில் முதலிடம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. பூதலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வியாழக்கிழமை கிருஷ்ணா ஜெயந்தி விழா கொண்டப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கடவுள் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களான அதிரசம், எள்ளடை, சீடை, தட்டை ஆகி... மேலும் பார்க்க