சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
தனியாா் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வியாழக்கிழமை கிருஷ்ணா ஜெயந்தி விழா கொண்டப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கடவுள் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களான அதிரசம், எள்ளடை, சீடை, தட்டை ஆகியவை படையலிடப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாணவ மாணவிகள் கிருஷ்ணா், ராதையைப் போல வேடம் அணிந்து வந்து விளையாடினா். மாணவா்கள் கிருஷ்ணரின் ஸ்லோகத்தைக் கூறியும், தீராத விளையாட்டுப் பிள்ளை கிருஷ்ணன் என்ற பாடலுக்கு ஆடியும், கிருஷ்ணரின் பிறப்பை நாடகம் மூலம் நடித்தும் காண்பித்தனா். விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறப்புப் பரிசுகளை பள்ளித் தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயன், தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன் ஆகியோா் வழங்கினா்.