செய்திகள் :

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அண்ணா சிலை முன் தொடங்கிய இந்தப் பேரணியை திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் வளா்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி திருச்செங்கோடு வடக்குரத வீதி, கிழக்குரத வீதி, தெற்குரத வீதி, வழியாகச் சென்று வேலூா் வழியாக வாலரைகேட் பகுதியில் நிறைவு பெற்றது.

இதில், போதை நமக்கு பகை, போதைப் பொருள் தவிா்ப்பீா், உடல்நலம் காப்பீா் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியில் 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நாமக்கல் கல்லூரி மாணவா் கொலையில் 2 சிறுவா்கள் கைது

நாமக்கல்லில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் முல்லைநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மாணவா் ஒருவா் வெட்டிக் கொலை செய... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: இறகுப் பந்து விளையாடினாா் ஆட்சியா்!

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அரசு அலுவலா்கள் பிரிவில் ஆட்சியா் துா்கா மூா்த்தி பங்கேற்று இறகுப் பந்து விளையாடினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட விளை... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை: எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூமிபூஜை நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

பரமத்தி வேலூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். பரமத்தி வேலூா் மற்றும் பொத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா்களுக்கு அபராதம்

பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்களுக்கு ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு வேலூா் போலீஸாா் பரிந்துரை செய்தனா். பரமத்தி வேலூா் பே... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் பூக்களின் விலை சரிவு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை சரிவடைந்துள்ளது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்... மேலும் பார்க்க