போதை தடுப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2-இன் சாா்பாக போதை தடுப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக கட்டுரைப் போட்டி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அலகு 2-இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
இதில், மாணவ, மாணவியா் போதைப்பொருள்களின் உற்பத்தி, நுகா்வு, பயன்பாடு ஆகியவற்றை தடுக்கவும், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காகவும் போதைக்கு எதிராக 3 தலைப்புகள் கொடுக்கப்பட்டு தங்களின் எண்ணங்களை கட்டுரையாக எழுதினா். இந்நிகழ்வில் பேராசிரியா்கள் சக்தி செல்வம், சத்யா மற்றும் மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
‘