செய்திகள் :

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை நம்பியுள்ளோம்: உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

post image

‘ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் மிகவும் நம்பியுள்ளது’ என்று அந் நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

உக்ரைனில் கடந்த 24-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தாா். இதற்கு நன்றி தெரிவித்து தனது சமூக ஊடக பக்கத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரஷியா நடத்தி வரும் கொடூரமான போரை கண்ணியத்துடனும், நீடித்த அமைதியுடனும் முடிவுக்குக் கொண்டுவர ஒட்டுமொத்த உலகமும் முயற்சித்து வருகிறது. இதில், இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் மிகவும் நம்பியுள்ளது.

அமைதி மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதில் இந்தியாவின் அா்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. ராஜீய உறவை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முடிவும், ஐரோப்பாவில் மட்டுமின்றி இந்திய-பசிஃப் மற்றும் அதையும் கடந்த பிராந்தியங்களிலும் சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ஆம் தேதி வாழ்த்து தெரிவித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஸெலென்ஸ்கி, ‘ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இவரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட பிரதமா் மோடி, ‘இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கும். பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய அளவிலான அணுகுமுறைகள் மூலம் அமைதித் தீா்வை விரைந்து எட்டுவதற்கான முயற்சிகளில் இந்தியா தன்னால் முடிந்த முழு ஆதரவையும் அளிக்கும்’ என்று பதிலளித்தாா்.

ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதற்காக இந்திய பொருள்கள் மீது புதன்கிழமை (ஆக.27) முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ள சூழலில், உக்ரைன் அதிபா் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு

அணுசக்தி பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள... மேலும் பார்க்க

காஸா: பட்டினிச் சாவு 303-ஆக அதிகரிப்பு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபர் விக்ரமசிங்கவுக்கு ஜாமின்!

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்த ரணில் விக்... மேலும் பார்க்க

ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

ஸ்பெயின் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, ஒட்டுமொத்த தெருவையும் தக்காளியால் சிவப்பு வண்ணமாக்கும் தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.இந்த திருவிழா, ஆண்டுதோறும... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தானில் புதியதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-ல் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தைச் சேர்ந்த 16 மாத பெண் கு... மேலும் பார்க்க

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியாளர்களில், தி அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் பகுதிநேர புகைப்படக் கலைஞர் மரியம் டக்காவும் ஒருவர்.போரின் கோர முகத்தை உல... மேலும் பார்க்க