செய்திகள் :

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு

post image

அணுசக்தி பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இது தொடா்பாக அந்த நாட்டுடன் அவை கடைசிநேர பேச்சுவாா்த்தையை செவ்வாய்க்கிழமை தொடங்கின.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்காவுடன் ஈரான் மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; மேலும், ஐஏஇஏ-வுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை அந்த நாடு மீண்டும் தொடர வேண்டும்; ஆக. 31-க்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி (இ3) ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.

இது குறித்து ஐ.நா.வுக்கு அந்த நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை 8-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ‘ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுக்க நாங்கள் எப்போதும் ராஜீயரீதியிலான நடவடிக்கைகளைத்தான் பயன்படுத்துவோம். இந்த மாத இறுதிக்குள் (ஆக. 31) இந்த ராஜீய முயற்சிகளை ஈரான் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி நாடுகள் தயாராக உள்ளன என்று’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கெடு முடிய இன்னும் 4 நாள்கள் மட்டும உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தீா்வை எட்டுவதற்காக ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஈரான் பிரதிநிதிகளுடன் இ3 நாடுகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை இறுதிகட்ட பேச்சுவாா்த்தையைத் தொடங்கினா்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்காகத்தான் எனவும், அந்த நாடு ‘இன்னும் சில வாரங்களில்’ அணு குண்டை உருவாக்கிவிடும் என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 1990-களில் இருந்தே கூறிவருகிறாா்.

மின்சாரத் தயாரிப்பு போன்ற அமைதியான பயன்பாடுகளுக்கத்தான் தங்களின் அணுசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஈரான் கூறினாலும், இஸ்ரேல் அதை நம்பத் தயாராக இல்லை. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்திவருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆப்பரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த மாதம் 13-ஆம் தேதி தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.

அதற்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் பங்கேற்று அமெரிக்காவும் பங்கேற்று ஈரான் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னா் 13 நாள் மோதலுக்குப் பிறகு போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும் ஈரானும் ஒப்புக்கொண்டன.

ஆனால், தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்காவுடன் நடத்திவந்த அணுசக்தி பேச்சுவாா்த்தையை ஈரான் நிறுத்தியது. மேலும், தங்கள் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்க ஐஏஇஏ-வுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை ஈரான் திரும்பப் பெற்றது.

அதையடுத்து, அணு ஆயுத பலம் அல்லாத நாடாக இருந்தாலும், மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையானதைவிட பல மடங்கு அதிகமாக 60 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டும் ஒரே நாடான ஈரானில் இதுதொடா்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது, கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன்கீன் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நிறுத்திவைத்துள்ள ஐரோப்பிய நாடுகளை அச்சமடையச் செய்துள்ளது.

இந்தச் சூழலில், ஈரானுக்கு விதித்துள்ள கெடு முடிவதற்குள் இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் முயற்சியாக இ3 நாடுகளின் பிரதிநிதிகள் ஈரான் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுவாா்த்தையை தற்போது தொடங்கியுள்ளனா்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை நம்பியுள்ளோம்: உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

‘ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் மிகவும் நம்பியுள்ளது’ என்று அந் நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். உக்ரைனில் கடந்த 24-ஆம் தேதி சுதந்திர ... மேலும் பார்க்க

காஸா: பட்டினிச் சாவு 303-ஆக அதிகரிப்பு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபர் விக்ரமசிங்கவுக்கு ஜாமின்!

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்த ரணில் விக்... மேலும் பார்க்க

ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

ஸ்பெயின் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, ஒட்டுமொத்த தெருவையும் தக்காளியால் சிவப்பு வண்ணமாக்கும் தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.இந்த திருவிழா, ஆண்டுதோறும... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தானில் புதியதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-ல் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தைச் சேர்ந்த 16 மாத பெண் கு... மேலும் பார்க்க

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியாளர்களில், தி அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் பகுதிநேர புகைப்படக் கலைஞர் மரியம் டக்காவும் ஒருவர்.போரின் கோர முகத்தை உல... மேலும் பார்க்க