இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
போர்ப்பதற்றம்: பாக்., இந்தியாவுக்கு ஈரான் அமைச்சர் வருகை!
புதுதில்லி: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மே 8-ஆம் தேதி இந்தியா வருகிறார்.
ஈரானிலிருந்து முதலில் பாகிஸ்தான் செல்லும் அவர், அங்கு முக்கிய விவகாரங்கள் குறித்து உயர்நிலைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அதன்பின், அவர் அங்கிருந்து புது தில்லிக்கு வருகை தர உள்ளார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு ஈரான் அமைச்சர் கடுங்கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது அவர், இந்தியாவும் பாகிஸ்தானும் ஈரானுக்கு சகோதர்களைப் போன்றவர்கள். அப்படியிருக்கும்போது, இந்த இக்கட்டான தருணத்தில் இரு நாடுகளுடனும் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதன்மூலம் அமைதி நிலவ தாங்கள் முனைப்பு காட்டுவதாக பொருள்பட அவர் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.