பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீ...
போலண்ட் 4 விக்கெட்டுகள்: இந்தியா 145 ரன்கள் முன்னிலை!
சிட்னி டெஸ்ட்டின் 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185க்கு ஆல் அவுட்டாக ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 32 ஓவர்கள் விளையாடி 141/6 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் கூடுதலாக இருந்ததால் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
இந்திய அணியின் ஸ்கோர் கார்ட்
ஜெய்ஸ்வால் - 22
கே.எல்.ராகுல் - 13
ஷுப்மன் கில் - 13
விராட் கோலி - 6
ரிஷப் பந்த் - 61
ரவிந்திர ஜடேஜா - 8*
நிதீஷ் ரெட்டி - 6*
ஆஸி. அணி 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் 2-2 என தொடர் சமநிலையில் முடியும். பிஜிடி தொடரும் இந்தியா வசம் தக்கவைக்கப்படும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கிறது. இதில் தோல்வியுற்றால் அனைத்துமே இந்தியா இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.