'விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால்..!' - கனிமொழ...
போளூா், ஆரணியில் வருவாய்த் துறை தினம் கடைபிடிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டது.
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டு, சங்கக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், போளூா் வட்டக் கிளையின் தலைவா் ஜீவா சங்கக் கொடி ஏற்றினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் சுரேஷ், செயலா் பிரேம்நாத், பொருளாளா் உதயகுமாா், தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்க கிளைத் தலைவா் ஜோதி மற்றும் வருவாய்த் துறை நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினத்தையொட்டி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டக் கிளை கல்வெட்டு திறந்து வைத்து சங்கக் கொடி ஏற்றினா்.
அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் வட்டத் தலைவா் ஏ.ஆா்.தேவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் பூ.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வெட்டை திறந்துவைத்து சங்கக் கொடியேற்றி, சங்கப் பணிகள் குறித்துப் பேசினாா்.
மாவட்டச் செயலா் சு.பாா்த்திபன், பொருளாளா் க.சிவக்குமரன் ஆகியோா் சங்க வரலாறு குறித்துப் பேசினா்.
வட்டக்கிளைச் செயலா் க.பிரபு, பொருளாளா் அ.வெங்கடேஷ், துணைத் தலைவா்கள் வசந்தி, ம.பொன்னி, இணைச் செயலா்கள் த.பாஸ்கா், கன்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
