மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகளுக்கு தடை! - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் விளையாடுவதற்கு உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கால்பந்து அசோசியேசன் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளுக்கு உடனடி தடைவிதித்த அடுத்த 24 மணிநேரத்துக்குள்ளாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த சட்டத்தில் பெண்கள் மட்டுமே பெண்களுக்கான போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர்.
திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பெண்களுக்கான போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஓபன் போட்டிகளில் அவர்கள் சேர்ந்து விளையாடலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு பாலினத்தை வைத்து ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கவதை இது நோக்கமாகக் கொள்ளாமல், மற்ற வீராங்கனைகளின் பாதுகாப்புக்காக மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதையும் படிக்க: சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!