தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: க...
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இதனை கற்றுக் கொண்டேன்: ஷஃபாலி வர்மா
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கற்றுக் கொண்ட விஷயம் குறித்து தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் ஷஃபாலி வர்மா மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஷஃபாலி வர்மா பேசியதென்ன?
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து எப்படி இன்னிங்ஸை கட்டமைத்து விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டதாக ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஷுப்மன் கில் பதில்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மகளிர் பிரீமியர் லீக் தொடரில், வீராங்கனைகளுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. தங்களது தனிப்பட்ட ஆட்டத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடியபோது, இன்னிங்ஸை எப்படி கட்டமைத்து விளையாடுவது என்பதை கற்றுக் கொண்டேன்.
சர்வதேச வீராங்கனைகளுடன் பேசிப் பழகும் வாய்ப்பினை இந்தத் தொடர் ஏற்படுத்தித் தருகிறது. வெளிநாட்டு வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடுவது பல்வேறு சிறப்பான அனுபவங்களை எங்களுக்கு கொடுக்கிறது. அவர்கள் போட்டிகளின்போது மிகவும் அமைதியாக செயல்படுகிறார்கள் என்றார்.
இதையும் படிக்க: அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே நிதான ஆட்டம்!
இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.