செய்திகள் :

மகாராஷ்டிரம்: மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி!

post image

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர்.

பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பகலில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் 15 பேருக்கு மேல் சிக்கியிருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.

தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க : ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

8 பேர் பலி

இந்த நிலையில், நாக்பூர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்கட்ட தகவலின்படி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்திப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், இது மோடி அரசின் தோல்வி என்று விமர்சித்துள்ளார்.

சிகிச்சையில் அலட்சியம் என குற்றச்சாட்டு: மேற்கு வங்கத்தில் மருத்துவா்கள் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறி நோயாளியின் உறவினா்கள் மருத்துவமனையை சூறையாடினா். மருத்துவா்கள், மருத்துவ ஊழியா... மேலும் பார்க்க

10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்: வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை

வக்ஃப் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 35-ஆவது கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டதால், 10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?

பாகிஸ்தான் காவல்துறையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறையில் உயிரிழந்தார்.இந்தியாவைச் சேர்ந்த மீனவர் பாபுவை 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், சிறைக்க... மேலும் பார்க்க

லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!

மெர்க்குரி இவி டெக் லிமிடெட் மற்றும் பிரவேக் லிமிடெட் நிறுவனங்கள், தங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் அளித்துள்ளது.மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான மெர்க்குரி இவி டெக் லிமிடெட் (Mercury EV-Tech Limi... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணத்துக்குக் காரணம் விஷம்?

ரஜெளரி/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தின் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதாக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் பார்வையிடத் திட்டமிடும் மக்களுக்கு குஜராத் அரசு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா ... மேலும் பார்க்க