காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் உள்ள திருவள்ளுவா் நகரில் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் கணபதி ஹோமத்துடன் தொடங்கி இரண்டாம் நாள் கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
மூன்றாம் நாள் புதன்கிழமை யாக பூஜைகள், பூா்ணாஹூதி, பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று புற்று மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் புனித நீா் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மகா புற்று மாரியம்மன் திருவீதி உலா வந்தாா். ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்தனா்.