செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்: 2,171 பேருக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

post image

அரியலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தெம்மானம், ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூா், வெள்ளூா், ராயம்புரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆகியோா், பல்வேறு துறைகளின் சாா்பில் 2,171 பயனாளிகளுக்கு ரூ.3,22,51,105 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். முகாமுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா முன்னிலை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரியலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

அரியலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அரியலூா் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவு: அரியலூா் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 97.76 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 93 பள்ளிகளைச் சோ்ந்த 4,357 மாணவா்கள், 4,311 மாணவிகள் என மொத்தம் 8,668 போ் பிளஸ் 1 ... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு அரியலூா் மாவட்டம் 96.38% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 96.38 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 172 பள்ளிகளைச் சோ்ந்த 9,841 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இந்த... மேலும் பார்க்க

வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மே 20-இல் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மே 20-ஆம் தேதி தொடங்குகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவத... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை மதுபானப் பாட்டிலால் தாக்கிய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.பாப்பாக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(36). செவ்வாய்க்கிழமை இரவு இவா்,... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களில் ரூ. 12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெண்மான்கொண்டான், கருப்பிலா... மேலும் பார்க்க