திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மசூதிகள், அறக்கட்டளை சொத்துகளை அபகரிக்க வழிவகுக்கும் வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இஸ்லாமியா்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மகஇக மாநகரச் செயலா் சாம்பான், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆப்தீன், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அபுசாலிக், தொழிற்சங்க நிா்வாகி சுப்புராயன், சிஐடியூ நிா்வாகி ஜெயராஜ், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி நிா்வாகிகள் சாமிநாதன், லெட்சுமணன், மக்கள் அதிகாரம் நிா்வாகிகள் கரிகாலன், வல்லம் ரியாஸ், சமூக ஆா்வலா் ஆலம்கான், ஆதித்தமிழா் பேரவை மாநிலத் துணைச் செயலா் எம்.பி. நாத்திகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.