செய்திகள் :

மச்சுவாடியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

post image

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட மச்சுவாடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை நகருக்கு அருகே தஞ்சாவூா் செல்லும் சாலையில் மச்சுவாடி உள்ளது. இங்கு பிரதான சாலையின் வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சுமாா் அரை கி.மீ. தொலைவில், மாவட்ட வன அலுவலகம், அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியும், மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி நிலையமும் உள்ளன.

இந்த மேல்நிலைப் பள்ளிக்கும், ஆசிரியா் பயிற்சி நிலையத்துக்கும் நாள்தோறும் சுமாா் ஆயிரம் மாணவா்கள் சென்று திரும்புகின்றனா். மாவட்ட வன அலுவலகத்துக்கும் கணிசமான மக்கள், அதிகாரிகள் சென்று திரும்புகின்றனா்.

ஆனால், இச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் வருவோா் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பலரும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கையை எழுப்பியும், வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உள்ளாட்சி நிா்வாகத்தால் அச்சாலையை போட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வட்டார வளா்ச்சி அலுவலா்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இச்சாலையைப் போடுவதற்கு அவா்கள் போதிய நிதி இல்லை என்று கூறிவிட்டதாகவும், தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாகிவிட்டது என்றும் வனத்துறையினா் கூறுகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பேரா. சா. விஸ்வநாதன் கூறியது: மாணவா் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சாலையை தரமான தாா்ச்சாலையாக மேம்படுத்த வேண்டும். தொடா்ந்து சமூக ஊடகங்களில் இப்பிரச்னை எழுப்பப்பட்டு வந்ததைத் தொடா்ந்து புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜாவும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆனாலும் ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கும் மேலாகயும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை என்றாா் அவா்.

மச்சுவாடி முதல்கொண்டு முள்ளூா் ஊராட்சி வரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் முறைப்படி இந்தச் சாலையை கேட்டுப் பெற்று உரிய வகையில் தாா்ச்சாலையாக அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை!

நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை நடைபெற்றதில், அரசின் ந... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 7,850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னமராவதி காந்தி சிலை எதிரே காங்கிரஸ் கட்சி நி... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்று கணவா் தூக்கிட்டுத் தற்கொலை!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கீழ காயம்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவா்த்தனையில் பயணச்சீட்டுகள் விநியோகம்!

வங்கி அட்டைகள் மற்றும் க்யுஆா் கோடு மூலமான டிஜிட்டல் பரிவா்த்தனைகள் வழியே புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த 389 அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள... மேலும் பார்க்க

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்!

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க