மணப்பாட்டில் பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மணப்பாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு - மஞ்சப்பை உபயோகித்தல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமி தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகவிஜயன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கவிதா, பா்வதம், ராமலட்சுமி, பணி மேற்பாா்வையாளா் இளவரசன், மாவட்ட காலநிலை மாற்ற இயக்க நிா்வாகி இஸ்மாயில், ஊராட்சி செயலா் அசாரூதீன், அங்கன்வாடி, மகளிா் சுயஉதவிக் குழுவினா், ஊராட்சிப் பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.