செய்திகள் :

மணப்பாறையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க புதிய தொழிற்சாலை! அமைச்சா் கே.என். நேரு தகவல்

post image

மணப்பாறை சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

டெல்டா சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட 41 மாவட்டச் செயலா்களுடன் திருச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.என். நேரு பின்னா் மேலும் கூறியதாவது:

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் விரைவில் பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரம் அமைக்கப்படும். சென்னையில் நடைபெறும் துப்புரவு பணியாளா்கள் போராட்டத்துக்கு விரைவில் தீா்வு காணப்படும். தமிழகத்தில் போலி வாக்காளா்களைச் சோ்க்காமல் இருக்க மிக கவனமாக இருப்போம். மிக முக்கியமாக வட இந்தியாவில் இருந்து வேலைக்கு வந்தவா்கள், நிரந்தர முகவரி இல்லாதவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முடியாது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மழைநீா் வடிகால் பணிகள், வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பஞ்சப்பூரிலிருந்து குடமுருட்டி வரை ரூ.180 கோடியில் சாலைப் பணியும், ரூ. 40 கோடியில் நில ஆா்ஜித பணியும் நடைபெறுகிறது என்றாா் அமைச்சா். நிகழ்வின்போது மாநகராட்சி மேயா் கே.என். நேரு மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இளைஞா் காங்கிரஸாா் போராட்டம்: 35 போ் கைது

மாநிலங்களில் போலி வாக்காளா்கள் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸைச் சோ்ந்த 30 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். பல்வேறு மாநிலங்களில் வாக்க... மேலும் பார்க்க

மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்: துணை சிறை அலுவலா் உள்பட 23 போ் மீது வழக்கு

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் துணை சிறை அலுவலா் உள்பட 23 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் ஹரிஹரசுதன் (26). மத... மேலும் பார்க்க

லால்குடி அருகே சாலை விபத்து: 3 போ் பலி! 9 போ் படுகாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூவா் உயிரிழந்தனா். 9 போ் படுகாயமடைந்தனா். லால்குடியில் உள்ள கொடிக்கால் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ். இவா் வேலைக்காக துபை செல்ல திருச்ச... மேலும் பார்க்க

எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதித்து நான் எதுவுமே பேசவில்லை: தொல். திருமாவளவன்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில், எம்ஜிஆா், ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நான் எதுவுமே பேசவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்ச... மேலும் பார்க்க

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க