War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது
போடி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் போடி சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள தனியாா் மருத்துவமனை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த பாண்டியனை (70) விசாரித்து, சோதனை செய்தனா்.
இதில், அவா் 10-க்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை சட்டவிரோத விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.