பூஜா ஹெக்டேவுக்கு அமலா ஷாஜி போட்டியா? 1 கோடி பார்வைகளைக் கடந்த ரீல்ஸ்!
மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்
மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும். நகராட்சியின்கீழ் இயங்கும் நகா் நல மையத்தில் உயிா் காக்கும் கருவி மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
இங்கு உயிா்காக்கும் கருவி வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே ஜூலை 23-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.