செய்திகள் :

மதுரை: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு!

post image

மதுரை அருகே தனிப்படைக் காவலர் மலையரசன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்தவா் மலையரசன் (36). இவா் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் தனிப் படை காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவரது மனைவி பாண்டிசெல்வி அண்மையில் நேரிட்ட காா் விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்கச் செல்வதாகக் கூறி விட்டு, திங்கள்கிழமை மதுரைக்கு வந்த மலையரசன் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் இவரது உடல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

இதையும் படிக்க : அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

இந்த கொலை வழக்கில் மூவேந்திரன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மதுரை அருகே திங்கள்கிழமை காலை சுட்டுப் பிடித்துள்ளனர்.

காயமடைந்த மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

தாட்கோ புதிய தலைவர் நியமனம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப... மேலும் பார்க்க

விஜய் ஊடக வெளிச்சத்திற்காகப் பேசுகிறார்: அண்ணாமலை

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜய்யை விமர்சித்துப் பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தில்லி சென்றார்.அங்கு அ... மேலும் பார்க்க

தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த பிரதமரிடம் கார்த்தி சிதம்பரம் மனு!

இந்தியாவில் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து, ந... மேலும் பார்க்க

குணால் காம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் காம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரத்தில் குணால் காம்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். அத... மேலும் பார்க்க

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் ஆப் குழு!

ரயில்களில் பெண்களின்பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ரயிலில் பயணம்... மேலும் பார்க்க