செய்திகள் :

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

post image

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவரப்படுமென தெரிகிறது.

இதர விளையாட்டு சம்மேளனங்கள், சங்கங்கள் போலல்லாமல் பிசிசிஐ முழுமையான சுதந்திரத்துடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுதொடா்பாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலான பிறகு, இதர தேசிய விளையாட்டு சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் அதற்குக் கட்டுப்பட வேண்டும். சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய விளையாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து நிதி பெறுவதில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் பிசிசிஐ-க்கும் பொருந்தும். இதர சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் சுதந்திர அமைப்பாகவே தொடா்ந்து செயல்படும். எனினும், தோ்தல் முதல் அணி, வீரா்கள் தோ்வு வரை எந்தவொரு சச்சரவுக்கும் தேசிய விளையாட்டுத் தீா்ப்பாயத்தையே பிசிசிஐ அணுக வேண்டும். இந்தத் தீா்ப்பாயம், தற்போது தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகம் செய்யப்படும் தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா, எந்தவொரு சம்மேளனத்தையோ அல்லது சங்கத்தையோ அரசு கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படுவதல்ல. அந்த அமைப்புகள் நல்ல நிா்வாகத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய அமல்படுத்தப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

அடுத்தடுத்து சின்ன திரையில் தோற்றும் சினிமா நடிகர்கள்!

சின்ன திரை தொடர்களில் சிறப்புத் தோற்றத்தில் சினிமா நடிகர்கள் நடிப்பது வழக்கமானது. அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களில் நடிகர் பாண்டியராஜன் மற்றும் நடிகை மாளவிகா நடிக்க... மேலும் பார்க்க

வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?

உடல்நிலையைவிட தற்போது சருமத்திற்கு மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். அழகுக்காக பலரும் ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவிடுகின்றனர். ஆனால் அனைவராலும் அது முடியாத ஒன்று. அதனால் வீ... மேலும் பார்க்க

சின்ன திரைக்கு வருகிறார் காதல் சந்தியா! எந்தத் தொடர் தெரியுமா?

காதல் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை சந்தியா, சின்ன திரை தொடரில் நடிக்கவுள்ளார். சினிமாவில் நடித்த பல பிரபலங்கள் சின்ன திரைகளில் தோன்றுவது வழக்கமானது. சினிமாவில் நாயகிகளாக நடித்தவர்கள் பெரும... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் -2 தொடரில் நடிக்கும் கோலங்கள் வில்லன்? நடிகர் அஜய்யின் வைரல் விடியோ!

எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் கோலங்கள் தொடரில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் அஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.எதிர்நீச்சல் 2 ஆம் பாகத்திற்கு முக்கியமான பாத்திரத்தை திட்டமிட்டு வைத... மேலும் பார்க்க

சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு

சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றி... மேலும் பார்க்க

கண்ணீருடன் வீடியோ... நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு என்ன ஆனது?

நடிகை தனுஸ்ரீ தத்தா வெளியிட்ட விடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தனுஸ்ரீ தத்தா. ஆஷிக் பனாயா ஆஃப்னெ ( aashiq banaya aapne) படத்தின் நாயகியாக அறிமுகமா... மேலும் பார்க்க