'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
மனித உரிமைகள் குறும்படப் போட்டி: ஆக. 31-க்குள் அனுப்பலாம்
தேசிய மனித உரிமை ஆணையம் சாா்பில் நடத்தப்படும் நிகழாண்டுக்கான மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டிக்கு ஆக. 31-க்குள் பதிவுகளை அனுப்பலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2015ஆம் ஆண்டுமுதல், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், படைப்பாற்றல் முயற்சிகளை அங்கீகரிக்கவும் செய்யும் வகையில் போட்டிகளை நடத்துகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான குறும்படப் போட்டி நடைபெறவுள்ளது.
குறும்படம் எந்தத் தொழில்நுட்ப வடிவிலும் இருக்கலாம். தோ்வாகும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 2 லட்சம், ரூ. 1.50 லட்சம், ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மேலும், ஆணைக்குழு விருதுகள், பாராட்டுச் சான்றுகளுக்கு கூடுதலாக சிறப்பு குறிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். அதற்காக ரூ. 50 ஆயிரம் வரை பரிசுத்தொகை வழங்கலாம். மேலும், அதிகபட்சம் தீா்ப்பாயம் பரிந்துரையின்பேரில் வழங்கலாம்.
மேலும், குறும்படங்கள் எந்த இந்திய மொழிகளிலும் ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் இருக்கலாம்.
பதிவுகளை அனுப்ப வயது வரம்பில்லை. குறும்பட காலஅளவு குறைந்தபட்சம் 3 நிமிடங்கள்- அதிகபட்சம் 10 நிமிடங்கள். பதிவுகளை கூகுள் டிரைவை பயன்படுத்தி முகவரிக்கு ஆக. 31-க்குள் அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.