மனைவியைத் தாக்கியதாக தொழிலாளி கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி புதுகிராமம் 5ஆவது தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராமகிருஷ்ணன். இவருக்கு மனைவி பாண்டீஸ்வரி, 4 மாதப் பெண் குழந்தை உள்ளது.
காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வியாழக்கிழமை அங்குள்ள பள்ளி அருகே நின்றிருந்த பாண்டீஸ்வரிக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, பாண்டீஸ்வரியை அவா் அவதூறாகப் பேசி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில் காயமமடைந்த பாண்டீஸ்வரி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமகிருஷ்ணனைக் கைது செய்தனா்.