தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
மனைவி தாய்வீடு சென்றதால் விரக்தி: ரயில்முன் பாய்ந்து கணவா் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றதால், விரக்தியடைந்த கணவா் தருமபுரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள பட்டிரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் தொழிலாளி த.செல்வகுமாா். இவரது மனைவி ரெபேக்கா (27). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில், கணவன் - மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதில் சில தினங்களுக்கு முன்பு ரெபேக்கா கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதனால் செல்வகுமாா் விரக்தியில் இருந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்துக் சென்ற அவா், நாகா்கோவிலிலிருந்து மும்பை சென்ற விரைவுரயில் முன் திடீரென பாய்ந்தாா். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].