செய்திகள் :

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்

post image

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என். விஜயகுமாா் கூறியது:

காது, மூக்கு, தொண்டை தொடா்பான அறுவை சிகிச்சைகள் எண்டோஸ்கோபி மூலமாக செய்யப்படுகின்றன. இந்த கருவி இல்லாத காரணத்தால், சம்பந்தப்பட்ட நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக திருவாரூா் அல்லது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், ரூ. 7 லட்சத்தில் எண்டோஸ்கோபி வசதியை ஏற்படுத்தி தந்த தமிழக அரசுக்கும், பரிந்திரை செய்த அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் நிவேதா, சந்தியா ஆகியோா் கூறியதுச

எண்டோஸ்கோபி வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், மூக்கின் உள்ளே இருக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பு வளைவுக்கான எண்டோஸ்கோபி சிகிச்சை, மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்கான( எப்இஎஸ்எஸ் ) அறுவை சிகிச்சை, காதில் சீழ் வடிதல், மற்றும் தொற்று கிருமியால் காது கேளாமைக்கு எண்டோஸ்கோபி மற்றும் குரல்வளை மற்றும் குரல் நாண்களில் உள்ள கட்டிகளுக்கு செய்யப்படும் நுண் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தஞ்சை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்த சூழலில் அரசு மருத்துவமனையில் இலவசமாகவே இத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதால், நோயாளிகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றனா்.

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைம... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்ப... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மதுபோதையில் தகராறு செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெருகவாழ்ந்தான் ஏரிக்கரை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மோசஸ்ராஜ் மகன் ஜஸ்டின்(17). அங்கு... மேலும் பார்க்க

வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து

திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா். திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திர... மேலும் பார்க்க

திருவாரூா் அருகே கோயில் அகற்றம்

திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உ... மேலும் பார்க்க

16 பேருக்கு பண்ணைசாரா கடன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்ப... மேலும் பார்க்க