செய்திகள் :

மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது: பாஜக

post image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு வைத்துளார்.

நாட்டின் முதல் சீக்கிய பிரதமரான மன்மோகன் சிங் இறுதிச் சடங்கிற்கு தனி இடம் ஒதுக்காமல் பாஜக அவமதித்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்ததற்கு பதிலளிக்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஜே.பி.நட்டா, "முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் முன்னாள் பிரதமரின் இறப்பில் கூட அரசியல் விளையாட்டு விளையாடுவதை தவிர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இதையும் படிக்க | மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு!

மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது அவருக்கு உண்மையான மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்கவில்லை. இப்போது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸின் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனையை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது.

இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை: மத்திய அரசு

மாநிலங்களுக்கு இடையிலான பகுதிகளில் புதிய இடங்களுக்கு தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வரும் 2026, மார்ச் 31ஆம... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம்: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்துவிட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்."வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவ... மேலும் பார்க்க

வெளிநாடுகளின் பெயரில் போலி நோய் எதிர்ப்பு மருந்துகள்: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபர்வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என பெயர் பொறிக்கப்பட்ட மருந்துகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கேட... மேலும் பார்க்க

நிதியமைச்சக கணினிகளில் சீனா இணையவழி ஊடுருவல்

தங்கள் கணினிகளில் சீன அரசுடன் தொடா்புடையவா்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அமெரிக்க நிதியமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது மிகப் பெரிய அத்துமீறல் சம்பவம் என்றும் அமைச்சகம் விமா்சித்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 9-ஆவது நாளாக மீட்புப் பணிகள் நீடிப்பு

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நீடித்தது. கடந்த டிச.23-ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள கோட்புத்லி-பெரோா் மாவட்டத்தில் தனது தந்தையின் விளைநிலத்தி... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீது வன்கொடுமை அதிகரிப்பு- காா்கே சாடல்

‘சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு எதிரான மனநிலையுடன் மத்திய-மாநில பாஜக அரசுகள் செயல்படுகின்றன; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள... மேலும் பார்க்க