கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
மம்மூட்டியின் களம் காவல் அப்டேட்!
நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம் காவல் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி களம் காவல் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளதாம்.
இதில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனும் வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், ‘காத்திருங்கள்’ எனத் தெரிவித்துள்ளது.
இது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, களம் காவல் செப்டம்பர் வெளியீடாகத் திரைக்கு வருகிறதாம்!
இதையும் படிக்க: தமிழ் சினிமாவுக்கு நிறைய சசிகுமார்கள் தேவை: முத்தையா