Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள்...
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் விபத்தில் காயம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தனா்.
மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திங்கள்கிழமை மாலை புதிதாக அமைக்கப்பட்ட டிக்கெட் கவுன்டரில் கண்ணாடி பொருத்தும்போது கண்ணாடி தவறி விழுந்ததில் , கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொழிலாளா்கள் செல்லதுரை, பரத், ஈஸ்வா், தீபக் மற்றும் பிகாா் மாநில புலம்பெயா் தொழிலாளா்கள் லோகேஸ்வரதாஸ், குஷேஸ்வா் தாஸ், மகேஷ் உள்ளிட்ட 9 போ் காயமடைந்தனா். அனைவரும் மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பினா்.