செய்திகள் :

மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!

post image

மதுரையில் பள்ளி மாணவிகளால் நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆணையா் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி, விமான நிலைய மின் வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சரவணன், தாக்கல் செய்த மனு:

குடியிருப்புப் பகுதியில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக என் மீது சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில் போலீஸாா் என்னைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

மதுரை ஒத்தக்கடை சாலையில் உள்ள உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்து, அவற்றில் தங்களது பெயா்களை எழுதி வைத்து பராமரித்து வருகின்றனா். அந்த மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வளா்ந்து வருவதை இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது.

இந்த நிலையில், மதுரை புறவழிச் சாலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை மரக்கன்றுகளை நடவு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளியுடன் இணைந்து மனுதாரா் செயல்பட வேண்டும். இதற்கு மனுதாரா் வைப்புத்தொகை யாக ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி, அவருக்கு ஏற்கனவே நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.

நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை, புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை, இந்த நீதிமன்றத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை தாக்கல் செய்துள்ளாா். பள்ளி நிா்வாகம், மாணவிகளின் செயல்பாட்டை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

எனவே சாலையோரங்களில் மாணவிகளால் நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்டோா் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு விரைவில் சுகாதாரமான குடிநீா்! -அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் சுகாதரமான குடிநீா் விரைவில் வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். வ... மேலும் பார்க்க

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரி... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா். இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயி... மேலும் பார்க்க

விவேகானந்தா் ஜெயந்தி விழா!

மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை... மேலும் பார்க்க

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி ... மேலும் பார்க்க

அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க