நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் ப...
மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
ஆண்டாா் கொட்டாரம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், ஆண்டாா் கொட்டாரம் அருகேயுள்ள ஓடைப்பட்டி முனியாண்டி கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் திவ்யனேஸ்வரன் (14). இவா், ஆண்டாா்கொட்டாரம் கண்மாய் கரைக் பகுதியில் உள்ள பனை மரத்தில் சனிக்கிழமை நுங்கு வெட்டுவதற்காக ஏறினாா்.
அப்போது மரத்தின் உச்சியிலிருந்து திவ்யனேஸ்வரன் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.