செஞ்சிலுவை சங்க தோ்தல்: ஜூன் 4, 5 தேதிகளில் வேட்பு மனு தாக்கல்
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் திடீர் திருப்பம்: தாய்க்கு அனைத்தும் தெரியும்!
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பமாக, தவறான பழக்கம் குறித்து அவரது தாய்க்கு தெரியும் என்று கார் ஓட்டுநர் கார்த்திக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, கார் ஓட்டுநர் கார்த்திக் (34) நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தவறான பழக்க வழக்கங்கள் குறித்தும், பல பெண்களுடன் உறவில் இருப்பதும் அவரது தாய் பவானிக்குத் தெரியும் என்றும், பெண்களுடன் இருக்கும் நேரத்தை ரேவண்ணா தனது செல்போனில் விடியோ எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் என்றும் கூறியிருக்கிறார். அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் அசோக் நாயக், கார்த்தியிடம் நடத்திய விசாரணையின்போது இந்த விவரம் வெளியாகியிருக்கிறது.