உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!
கடைசி டெஸ்ட்டில் பும்ரா மருத்துவமனைக்குச் சென்றதால் இந்தியாவை விராட் கோலி வழிநடத்தி வருகிறார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவர் மட்டுமே வீசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீசும்போது சிறிது பிரச்னை இருப்பதால் ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
பும்ரா சென்றதும் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.
பும்ரா இல்லாமலே இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர்.
இந்தியாவின் சார்பாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
பும்ரா 2 விக்கெட் எடுத்து வெளியேறினார். நிதீஷ் ரெட்டி 2 விக்கெட்டும் எடுத்து அணிக்கு உதவினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 14 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பும்ரா இந்தியாவுக்கு முக்கியமான பந்துவீச்சாளர். இரண்டாம் இன்னிங்ஸில் அவர் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.