தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
மறுவாழ்வு இல்லம் அமைக்க ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைக்க தகுதியும், விருப்பமும் உள்ள தொண்டு நிறுவனங்கள் வருகிற ஜன.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லங்களை அமைப்பதற்குத் தகுதியான தொண்டு நிறுவனத்தைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
எனவே, இதற்கான அனுபவமும், தகுதியும், விருப்பமும் உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பத்துடன் கூடிய கருத்துருவை வருகிற ஜன.31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டாட்சியா் அலுவலக வளாகம், பெரியாா் சிலை அருகில், திருவண்ணாமலை-606601 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 04175-223030, 6382614143, 6382614197 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.