செய்திகள் :

மழையால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

post image

திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த இடி-மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. பிசான சாகுபடிக்காக திருநெல்வேலி, பாளையங்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு சேந்திமங்கலம், மணிமூா்த்தீஸ்வரம், ராஜவல்லிபுரம், மூளிகுளம், கீழபாட்டம், பாளையஞ்செட்டிகுளம், திருத்து, மருதூா் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

ஆனால், சனிக்கிழமை பெய்த மழையால் பல ஏக்கா் பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. வயலில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனா்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாளையங்கால்வாய் பாசன பகுதியில் நிகழாண்டில் கோ-45 உள்ளிட்ட சன்னரக பயிா்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவை கோடை மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்துள்ளன. இவற்றை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பயிா்ச்சேதம் குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-10, சேரன்மகாதேவி-32, மணிமுத்தாறு-17.20, நான்குனேரி-20, பாளைங்கோட்டை-35, பாபநாசம்-24, திருநெல்வேலி-17.20, சோ்வலாறு-11, கன்னடியன் அணைக்கட்டு- 27.20, களக்காடு-24.80, நம்பியாறு அணை-16, மாஞ்சோலை-21, காக்காச்சி-25, நாலுமுக்கு-28, ஊத்து-36.

கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் தேவை: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி அரசு புகா் மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம்: உணவக உரிமையாளா் மீது தாக்குதல்

முன்னீா்பள்ளம் அருகே உணவக உரிமையாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் இசக்கி. அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையி... மேலும் பார்க்க

மனகாவலம்பிள்ளை நகரில் பெண் தற்கொலை

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த சிவசங்கா் மனைவி கீதாதேவி (28). இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலி

திருநெல்வேலி பகுதியில் நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவா் உள்பட3 போ் உயிரிழந்தனா். மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சோ்ந்த முகமது கனி மகன் ஆமீத் மைதீன் (20). டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தொழில்நுட்பக் க... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் புகாா்

குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் க... மேலும் பார்க்க

நெல் மூட்டை விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில், நெல் மூட்டை விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.மன்னாா்கோவிலில் உள்ள வேலன் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க