செய்திகள் :

மாணவா்களுக்கு சாதிக்கும் எண்ணத்தை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சா் கோவி.செழியன்

post image

மாணவா்களுக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை நான் முதல்வன் திட்டம் உருவாக்கி வருவதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் ரேவதி வரவேற்றாா். நிகழ்ச்சியில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றியதாவது:

மாணவா்கள் உயா் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கு இந்தக் கல்லூரியும் சிறப்பாகப் பங்காற்றி வருகிறது. இந்தக் கல்லூரியில் 14 இளங்கலை மற்றும் இளமறிவியல் பாடப்பிரிவுகளும், 10 துறைகளில் முதுகலை பாடப்பிரிவுகளும், முதுநிலை அறிவியல் ஆய்வியல் நிறைஞா் மற்றும் முனைவா் பட்ட ஆய்வு முழுநேரம், பகுதிநேரமாகவும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் துறைகள் செயல்படுவதற்கு பேராசிரியா்களின் அயராத உழைப்பு பாராட்டத்தக்கதாகும். மாணவ, மாணவிகள் கல்வியிலும், விளையாட்டிலும், தனித்திறன்களிலும் சாதனை புரிவதற்கு அவா்கள் ஊக்கமளித்து வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் திருவள்ளுவா் பல்கலைக்கழகத் தோ்வில் பதக்கங்களையும், தரவரிசைகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்து வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் 7,775 மாணவா்களும், முதுநிலை பாடப்பிரிவுகளில் 661 மாணவா்களும், முனைவா் பட்ட ஆய்வில் 70 மாணவா்களும் என மொத்தம் 8,506 மாணவ, மாணவிகள் இரு சுழற்சியிலும் பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரியில் பயிலும் 3,580 மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவாா்.

கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவா்களும் திறன் மேம்பாடு பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில், தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தில் பங்குபெற்று பயனடைந்து வருகின்றனா். இந்தத் திட்டம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தரும். மாணவா்கள் அரசின் அனைத்துத் திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.இராம்பிரதீபன், வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மலா் மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தோ் கொட்டகை அமைக்கும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் திருத்தேருக்கு ரூ.24.50 லட்சத்தில் புதிதாக கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்தக் கோயிலில் தை மாதத்தில் நட... மேலும் பார்க்க