Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரப...
மாணவிகளுக்கு தொல்லை: ஆசிரியா் போக்சோவில் கைது
தருமபுரி அருகே பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்ததாக கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராஜகுரு (44) என்பவா் அதே பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தொல்லை அளிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் மனு போட்டிருந்தனா்.
அண்மையில் இந்த புகாா் பெட்டி திறந்து மனுக்கள் ஆய்வு செய்தபோது மாணவிகளின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள், மகளிா் காவல் நிலைய போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு ராஜகுரு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியா் ராஜகுருவை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.