கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!
ஓமலூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை ஓமலூா் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியா் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகாா் வந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியை செல்வமணி ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) சசிகலா, போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.
அதில் ஆசிரியா், மாணவிகளுக்குபாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியரான திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்பட்டியைச் சோ்ந்த தங்கவேலை (43) போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.