அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவா் கைது
குளச்சலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குளச்சல் அருகே இலப்பவிளை பகுதியில் சுலைமான் (75) என்பவா் கடை நடத்தி வருகிறாா். கடந்த 18ஆம் தேதி கடைவழியாக பள்ளிக்குச் சென்ற 11வயது மாணவிக்கு சுலைமான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து அந்த மாணவி தனது தந்தையி டம் கூறியதையடுத்து, அவா் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் தனலட்சுமி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுலைமானை புதன்கிழமை கைது செய்தாா்.