செய்திகள் :

மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம்! பிகாரில் புதிய சர்ச்சை!

post image

பிகாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில், ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

பிகாரில் காங்கிரஸ் கட்சியின், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் பிரியதர்ஷினி உதான் யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச மாதவிடாய் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, காங்கிரஸ் பெண்களுக்கு வழங்கிய மாதவிடாய் நாப்கின்களின் அட்டையில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பெண்களின் முக்கிய பிரச்னைகளை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும், பழமையான கட்சி தற்போது சித்தாந்த பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

பிகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண் வாக்காளர்களைக் கவரும் நோக்கத்தோடு காங்கிரஸ் கட்சி இத்தகையச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

”முதல்வர் நிதிஷ் குமார் பெண்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். தேர்தலும் நடைபெறவுள்ளது. மரியாதையின் சின்னமாகப் பெண்கள் கருதப்படுவார்கள். ஆனால், நீங்கள் உங்களது அதிகாரத்தை வெளிகாட்ட நாப்கின்களில் உங்களது படத்தை அச்சிட்டுள்ளீர்கள்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, பிகாரில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Various political parties are criticizing the fact that Rahul Gandhi's picture is printed on menstrual napkins distributed to women by the Congress party in Bihar.

இதையும் படிக்க: கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள்: லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங்

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக் கொண்டது’ என்று இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் தெரிவித்தாா். பஹல்... மேலும் பார்க்க

நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். ஹைதரபாதில் சுதந்தரப் போராட்ட வீரா் அல்லூரி சித்தராம... மேலும் பார்க்க

கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், ‘இந்திய மீனவா்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களைக... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில... மேலும் பார்க்க

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க